வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTEஎனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

Friday, August 21, 2009

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

கவிதை 28 : தோல்வி என்பது யாதெனில் ........

வெற்றி

இணைந்து கொள்ள துடிக்கும் - பல
மனிதர்களை காட்டும்
உறவு கொள்ள துடிக்கும் - பல
உறவுகளை காட்டும்
பகிர்ந்து கொள்ள துடிக்கும் - பல
நண்பர்களை காட்டும்
கனவு கொள்ள துடிக்கும் - பல
காதலை காட்டும்

"வெற்றி"யது பெற்றிடினும்
"உண்மை"யது கண்டிடலாகாது

வெற்றியிலும் குறைகள்
அங்கு மறைந்திருப்பதுண்டு

தோல்வி

உண்மை கண்டிட ஓர் நேரம்
உன்னை கண்டிட ஓர் நிறுத்தம்
தன்னம்பிக்கையை சோதித்திட ஓர் பரீட்சை
வாழ்க்கையை அறிந்திட ஓர் வரம்

"தோல்வி"யது வந்திடனும்
"உண்மை"யது கண்டிடலாம்

தோல்வியிலும் நிறைகள்
அங்கு தெரிவதுண்டு

தோல்வியையும் ஏற்றுக்கொள்
துவண்டிடாமல் பார்த்துக்கொள்
உண்மையையும் தெரிந்து கொள்
தன்னம்பிக்கையை சேர்த்துக்கொள்

தன்னம்பிக்கையின் வீழ்ச்சியே
உண்மையான தோல்வி

தோல்வி என்பது யாதெனில்
உண்மைக்கான ஓர் தேடல் .......

Friday, August 7, 2009

My kavithai 27 (27 . நம்பிக்கை விதைகள் ) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

27 th Kavithai : நம்பிக்கை விதைகள் (1st page) - (கவிதையாய் ஒரு பாடல் ) :

வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்

(வாழ்ந்திடலாம் ....)

உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ...)

தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே

தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே

தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு

(வாழ்ந்திடலாம் ...)

வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்

மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ....)