26: சரீரத்தின் உண்மை :
கற்றவன் எல்லாம் புத்திசாலியுமில்லை
கற்காதவன் எல்லாம் ஞானமில்லாதவனுமில்லை
கற்றது தான் கற்றான்
அவன் எல்லாம் கற்றான்
மனக்கண் திறந்த கல்விக்கு
தானம் செய்ய வில்லையெனில்
என்ன தான் கற்றான்?.
கோடிகள் பலதில் புரளுவான்
அன்னமென்று வருகையில்
பணங்கள் ஏதுமில்லையென பிதற்றுவான்
குறள்கள் ஆயிரம் சொல்லிடினும்
குரலில் மௌனமே உரையாடலாகிடுமே
ஓடுகின்ற நதிகள் எல்லாம்
தீர்ந்து போகையில்
நாவில் நீரோட்டம் எல்லாம்
வாட்டம் எடுக்குமே
அங்ஙனமே
ஜீவனோட்டம் எல்லாம்
ஓட நினைக்கையில்
ரத்தோட்டம் இன்றி
ஜீவனதும் இல்லையே
குருதியின் ஒரு பகுதி
நீ கொடுக்கையில்
குலமே ஒன்றிணைந்து
உனை வாழ்த்துமே
தானத்தில் உயர்ந்ததென்று எதுவுமில்லை
தானத்தில் தாழ்ந்ததென்று எதுவுமில்லை
எத்தானம் செய்திடிலும்
அதுவே சிறப்பு
உன் சரிரம் அழிந்தாலும்
உன் தடயங்கள் அழியாதே - தானம் செய்கையில்
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
ரா.அனந்தராஜ்.....
HTML LINK TAMIL WEBSITES LINKS
இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....
உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
எனது தமிழ் கிறுக்கல்கள் :
அரசியல் கவிதைகள்
(3)
ஆன்மீக கவிதைகள்
(7)
கண் தானம் பற்றிய குறிப்புகள்
(5)
கவிதையாய் ஒரு பாடல்கள்
(5)
காதல் கவிதைகள்
(2)
தத்துவ கவிதைகள்
(10)
நட்பு கவிதைகள்
(4)
நம்பிக்கை கவிதைகள்
(5)
நல்ல கருத்து கவிதைகள்
(20)
நாட்டுப்பற்று கவிதைகள்
(2)
பொது கவிதைகள்
(35)
திங்கள், 20 ஜூலை, 2009
திங்கள், 13 ஜூலை, 2009
My kavithai 25 . (25 : இதயமதில் என் பார்வை ) :
25 . இதயமதில் என் பார்வை :
விழியிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்
ஓர் விழியின் ஓர் பார்வையிலே
"நற்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"நற்செயல் தனை செய்திடு"
மறு விழியின் மறு பார்வையிலே
"தீஞ்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"தீஞ்செயல் தனை விட்டுடு"
கையிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்
ஓர் கையின் ஓர் பார்வையிலே
"உனை முழுதும் காத்திடு"
மறு கையின் மறு பார்வையிலே
"பிறர் தனை தூக்கிடு"
காலிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்
ஓர் காலின் ஓர் பார்வையிலே
"நல்லதை எட்டி முன்னேறு"
மறு காலின் மறு பார்வையிலே
"தீயதை எட்டி உதைத்திடு"
எல்லாம் இரு வழிப் பாதையாக
இருந்தும்
இதயமது ஓர் வழிப் பாதையாக
ஆனதேனோ?
இதயமதில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்
ஜீவன் பிறப்பதும் ஓர் முறை தான்
ஜென்மம் சாய்வதும் ஓர் முறை தான்
காதல் உதிப்பதும் ஓர் இடம் தான்
காதல் மறைவதும் அவ் விடம் தான்
காதலது எண்ணிக்கை கூடினால்
அது காதலுமல்ல
நட்பது உறவும் மாறினால்
அது நட்புமல்ல
காதல் ஓர் பெண்ணோடே
பிறக்க வேண்டும்
காதல் அப் பெண்ணோடே
முடிய வேண்டும்
நட்பு அது நட்பாகவே
பிறக்க வேண்டும்
நட்பு அது நட்பாகவே
முடிய வேண்டும்
எண்ணிக்கை கூடினாலும்
உறவுகள் மாறினாலும்
அது நேசம் அல்ல
அது சுயநலத்தின் அடையாளமே
இதயம் ஓர் வழிப்பாதையே
நன்மை மட்டுமே நிலைத்திடும் - இங்கே
விழியிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்
ஓர் விழியின் ஓர் பார்வையிலே
"நற்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"நற்செயல் தனை செய்திடு"
மறு விழியின் மறு பார்வையிலே
"தீஞ்செயல் தனை பார்"
அந் நொடியின் அவ் வேகத்தில்
"தீஞ்செயல் தனை விட்டுடு"
கையிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்
ஓர் கையின் ஓர் பார்வையிலே
"உனை முழுதும் காத்திடு"
மறு கையின் மறு பார்வையிலே
"பிறர் தனை தூக்கிடு"
காலிரண்டில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்
ஓர் காலின் ஓர் பார்வையிலே
"நல்லதை எட்டி முன்னேறு"
மறு காலின் மறு பார்வையிலே
"தீயதை எட்டி உதைத்திடு"
எல்லாம் இரு வழிப் பாதையாக
இருந்தும்
இதயமது ஓர் வழிப் பாதையாக
ஆனதேனோ?
இதயமதில் ஓர் பார்வை
நான் பார்த்தேன்
ஜீவன் பிறப்பதும் ஓர் முறை தான்
ஜென்மம் சாய்வதும் ஓர் முறை தான்
காதல் உதிப்பதும் ஓர் இடம் தான்
காதல் மறைவதும் அவ் விடம் தான்
காதலது எண்ணிக்கை கூடினால்
அது காதலுமல்ல
நட்பது உறவும் மாறினால்
அது நட்புமல்ல
காதல் ஓர் பெண்ணோடே
பிறக்க வேண்டும்
காதல் அப் பெண்ணோடே
முடிய வேண்டும்
நட்பு அது நட்பாகவே
பிறக்க வேண்டும்
நட்பு அது நட்பாகவே
முடிய வேண்டும்
எண்ணிக்கை கூடினாலும்
உறவுகள் மாறினாலும்
அது நேசம் அல்ல
அது சுயநலத்தின் அடையாளமே
இதயம் ஓர் வழிப்பாதையே
நன்மை மட்டுமே நிலைத்திடும் - இங்கே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)