வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

வெள்ளி, 6 நவம்பர், 2009

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு :

கவிதை 36 . அன்பே கடவுள் அகிலம் பரப்பு : ( கவிதையாய் ஒரு பாடல் )

மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!

அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!

( மதங்கள் என்ன சொல்லுது ....)

ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை

எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ....)

கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்

கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ...)

புதன், 21 அக்டோபர், 2009

கவிதை 35 . படைத்தவன் இருப்பது நிஜமன்றோ! :

35 . படைப்புகள் இருப்பது நிஜமெனில் படைத்தவன் இருப்பது நிஜமன்றோ! : ( கவிதையாய் ஒரு பாடல்)

யாரோ ஒருவன் ஆட்டி வைக்கிறான்
ஆட்டம் முடிந்ததும் உணர வைக்கிறான்
ஓர் புள்ளியில் தொடங்கி
ஓர் வட்டமடிக்கிறோம்
வட்டம் முடிவிலே வாழ்க்கை
அறிய வைக்கிறான்.

(யாரோ ஒருவன்....)

முதன் முதல் உலகை பார்த்ததும்
அடடா அவனே அழுகிறான்
அவன் அழுகை குரலை கேட்டதும்
மனிதன் இங்கே சிரிக்கிறான்

இறுதியில்
வாழ்வின் இறுதியில்
அவனே இங்கே சிரிக்கிறான்
அடடா மனிதன் அழுகிறான்

மாற்றமே!மனிதன் வாழ்க்கையே!
இதை புரிந்து நீ
வாழ்வில் உயரு நீ

(யாரோ ஒருவன்....)

உடலின் உள்ளே உயிருமுள்ளது
அதை கண்ணால் காண
எங்கு செல்வது?.

விதையின் உள்ளே மரமுமுள்ளது
அதை கண்ணால் காண
எங்கு செல்வது?.

இருந்தும் நாம்
கண்ணால் கண்டு கொள்கிறோம்
காட்சி கண்ட பின்
உணர்வை அறிந்து நிற்கிறோம்

உழைத்தால் உயர்வு புரியுமே
உணர்ந்தால் காட்சி தெரியுமே

படைப்புகள் இருப்பது நிஜமெனில்
படைத்தவன் இருப்பதும் நிஜமன்றோ?.
(யாரோ ஒருவன்....)

சனி, 17 அக்டோபர், 2009

கவிதை 34 . வரதட்சணை :

34. வரதட்சணை :

பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்கிறானே மனிதன்
இருந்தும் தன்
மெய்ப்பொருளெல்லாம் விற்றுத்தான்
உயிர் வாழ்வது ஏனோ?

பெண் ஒன்று தேடும் இடத்திலே
பொன் ஒன்றும் அங்கே தேடுகிறான்

எங்கெங்கு ஆண்மகன்கள்
தந்தை சொல்லுக்கு மிரண்டு
தாய் சொல்லுக்கு மகிழ்ந்து
வரதட்சணை எனும் பண நோயை
இசைவுடன் ஏற்றுக் கொள்கிறானோ

அங்கணமே
பொருளற்ற உடலாகிறான்
சிந்தனையற்ற மனிதனாகிறான்

துன்பம் எது வந்திடினும்
இன்பம் எது வந்திடினும்

வாழ்வில் எந்நொடியும்
உன்னோடு ஓர் ஜீவன்
உன் துணையாகிய துணைவியே

ஆண்மைக்கு அழகு
பெண்மையை காப்பது
பொருளை காப்பதல்ல

பெண்ணை விலை பேசி
உன்னை விற்று விடாதே
ஆண்மகனே

பொருள் : சில் ஆண்மகன்கள் தந்தை சொல்லுக்கு பயந்து,தாய் சொல்லுக்கு மகிழ்ந்து வரதட்சணை என்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.இங்கே பொருளற்ற உடலாக அவன் மட்டுமல்ல அவன் பெற்றோரும் உண்டு.வயதில் பெரியவர்கள் எல்லோரும் இங்கே பெரியவர்கள் அல்ல.எண்ணங்களால் உயர்ந்தவர்கள் மட்டுமே இங்கே பெரியவர்கள்.வரதட்சணையை ஒழிப்போம்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

கவிதை 33. ராணுவ வீரனே முதல் குடிமகன் :

33 . ராணுவ வீரனே முதல் குடிமகன் : (ஓர் ரயில் பயணத்தின் போது ராணுவ வீரர் ஒருவர் என்னோடு பகிர்ந்து கொண்டதை இங்கே கவிதை வடிவில் கொடுத்து இருக்கிறேன்.இது ஒரு உண்மை பதிவு )

எட்டாத உயரமெல்லாம்
எட்டிச் சென்றாய்
குளிர் தொட்டாலும்
நீயே தான்
தொடர்ந்து சென்றாய்

மலை உனை தொட்டாலும்
வெயில் உனை சுட்டாலும்
உயிர் உனை விட்டாலும்

உன் எண்ணம் எல்லாம்
ஒன்றிலே வைத்தே சென்றாய்

இரக்கமில்லா எதிரிகள் ஒரு புறம்
உறக்கமில்லா இரவுகள் மறுபுறம்

குண்டு சப்தத்தின்
ஒலிகள் மட்டும்
அங்கே ஓயாது

ஓயாத சப்தத்தின் நடுவிலே
உயிர் நீத்தது
எதிரியின் உயிர் மட்டுமின்றி
உன்
தோழனின் உயிருமாகும்

இவ்வுண்மை காலங்களால்
சில நேரம் பல பேர்
அறிய முடியாதது
இருந்தும்
அது குற்றமில்லை

நாலு புறமும் எதிரிகள்
சூழ்கையில்
அதை வென்றிட

நாலுபுறமும் ராணுவம்
சூழ்கையில்

எந்தப் பக்கம் எதிரிகள்
எந்தப் பக்கம் ராணுவம்

ஏதுமறியாது தனியாய்
நீ முன்னேறுகையில்

சப்தமில்லா அந்நொடியில்
புதர் நடுவே
மெல்லிய உரசல்கள்
---அது மனித ஊட்டம்
---மனசை சலனப்படுத்துது

எதிரியென நினைத்து
சுட்டுப் பார்க்கையில்
உயிர் நீத்தது
எதிரியல்ல
உயிர் தோழன்
என்கையில்

அந்நிமிடம் நீ
துடிக்கும் துடிப்புகள்
யார் அறிவார் தோழா?.

இருந்தும் முன்னேறுவாய்
எதிரிகளை பந்தாடுவாய்

உன் போல்
சுயநலமில்லா நாட்டுப்பற்று
வேறு எங்கு காண?

யார் யாரோ நாட்டின்
முதல் குடிமகன் என்கிறார்கள்
என்னை கேட்டால்
தோழா
நீயே பாரத நாட்டின்
முதல் குடிமகன்
நீயே இந்நாட்டின்
சுயநலமில்லா பாதுகாவலன்

வாழ்க உன் புகழ்
வளர்க உன் குலம்

ஜெய் ஹிந்த் .....

வெள்ளி, 2 அக்டோபர், 2009

கவிதை 32.தேடினால் தான் வாழ்க்கை புரியும் :

கவிதை 32 .தேடினால் தான் வாழ்க்கை புரியும் :

இறைவன் இல்லை என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை

எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே

இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்

வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.

வியாழன், 1 அக்டோபர், 2009

கவிதை 31 . உணர்வுகள் தான் மனிதனே :

31 . உணர்வுகள் தான் மனிதனே :

வாழ்வில்
பெற்றவர் எல்லாம் தாயுமல்ல

வார்த்தை அம்புகளால்
உள்ளத்தை வதைத்து
நெஞ்சை உடைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே பெண்ணுமல்ல

முதலில்
உணர்வை புரிந்து கொள்ள முன் வரட்டும்
உயிரை நேசிக்க இங்கே முன் வரட்டும்

பின் பெண்ணெனலாம்
பின் தாயுமெனலாம்

வாழ்வில்
வளர்த்தவர் எல்லாம் தந்தையுமல்ல

அன்பை விதைக்காமல்
அதிகாரத்தை விதைத்து
தன்வசம் வைக்க
நினைப்பவர் எல்லாம்

இங்கே ஆணுமல்ல

முதலில்
நட்புடன் பழக முன் வரட்டும்
நம்பிக்கை ஊட்ட முன் வரட்டும்

பின் ஆணெனலாம்
பின் தந்தையுமெனலாம்

வாழ்வில்
நம்மோடு இருப்பவரெல்லாம் நண்பனுமல்ல

சுயநலங்கள் சுமந்து
நம்பிக்கையை மறந்து
உள்ளத்தால் உதவ
மறுப்பவர் எல்லாம்

இங்கே மனிதனுமல்ல

முதலில்
சுயநலங்களில்லா அன்பு கொள்ள முன் வரட்டும்
பொய்களில்லா உண்மை பேச முன் வரட்டும்

பின் நண்பனெனலாம்
பின் நம்பிக்கைகொள்ளலாம்.




பொருள் ::::::

தந்தையானாலும்,தாயுமானாலும்,நண்பனானாலும்,உறவுகளானாலும் அடுத்தவர் உணர்வுகளுக்கும்,எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவர் முதலில் மனிதன் என்ற நிலையில் இருந்து கீழே உள்ளவர் தான்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

கவிதை 30 : (30 . எனக்கான முதல் கவிதையும் இது தானோ? ) :

கவிதை 30 : எனக்கான முதல் கவிதையும் இது தானோ?:

என் கவிதையின் முதல் பயணம்
எங்கே உதயமானது?
இன்றளவும் எனக்கு தெரிய வில்லை

என் வாழ்க்கைப் பதிவில்
காயங்கள் நெஞ்சில் பதிய பதிய
வாழ்க்கை கொஞ்சம் புரிய புரிய

என்னை அறியாமலே
என் எண்ணங்கள் செதுக்கப்பட்டு
அவை எழுத்துக்களில் ஈட்டப்பட்டு

கவிதையென்பதில் முதல் அடியை
எடுத்திடவே காரணமானதே

நீரெல்லாம் சேர்ந்து
கடலாய் இருக்கையில்
அதிலே
மீன் அழுதால்
யாருக்கும் தெரிவதுமில்லை

எனது எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து
கவிதையாய் இருக்கையில்
அதிலே
என் சோகமும்
யாருக்கும் புரிவதுமில்லை

இருந்தும்

துக்கத்தின் ஒரு பகுதியை
எனது எழுத்துக்களால்
என் காயத்தை துடைத்திடவே
பார்க்கிறேன்

துக்கத்தின் மறு பகுதியை
எனது எழுத்துக்களால்
பிறர் கண்ணீரை தடுத்திடவே
பார்க்கிறேன்

காயங்களிலான வாழ்க்கை
யாருக்கும் வேண்டாம்
நான் நினைக்க வில்லை

இன்பங்கள் போன்று
துன்பங்கள் வந்திடினும்
அவையெல்லாம்
எதிர்கொள்ளும் பக்குவங்கள்
இருந்திடவே நினைக்கிறேன்

துன்பமில்லாமல் இன்பமுட்டும்
வேண்டுமெனில்
மனித பிறப்பும் தேவை தானோ?

என் எழுத்துக்கள் கவிதையாகுதே
இதையெண்ணி
மகிழ்ச்சி கொள்வதா?
இல்லை
என் சோகங்கள் எழுத்துக்கள் ஆகுதே
இதையெண்ணி
வருத்தம் கொள்வதா?.

ஒன்றல்ல இரண்டல்ல
முப்பது கவிதைகள்
எவ்வாறோ என்னால்
படைக்கப்பட்டு விட்டது

நான் கவிஞனில்லை
இருந்தும்
எப்படி படைத்தேன்
இதுவரை
எனக்கும் புரிய வில்லை

எத்தனையோ கவிதைகள்
யார் யாருக்காவோ படைத்தேன்
எனக்காக - நான்
படைத்த "முதல் கவிதை"
இது தானே.