கவிதை 45 : நிரந்தரமில்லா உலகில் நிரந்தரமானது எதுவோ?:
கடல் மீது கொண்ட நீலம்
தனக்கே சொந்தமென
கடல் கொந்தளித்தால்
வானம் தான் கோபம் கொள்ளாதோ?
வான் மீது கொண்ட மேகம்
தனக்கே சொந்தமென
வான் வழக்கிழுத்தால்
கடல் தான் கோபம் கொள்ளாதோ?
உடல் மீது கொண்ட ஆன்மா
தனக்கே சொந்தமென
உடல் கூக்குரலிட்டால்
இயற்கை தான் கோபம் கொள்ளாதோ?
உன் மீது கொண்ட காற்று
தனக்கே சொந்தமென
உன் உள்ளமுரைத்தால்
பஞ்சபூதங்கள் தான் கோபம் கொள்ளாதோ?
எதுவும் சொந்தமில்லா உலகில்
எல்லாம் சொந்தமென மானிடன்
மாயையை மெய்யாக்கி வாழ்வது
மட்டும் ஏனோ?.
பொருள் : கடல் நீரில் தெரியும் நீலம் கடலுக்கு சொந்தமில்லை.வானின் பிம்பம் கடல் மீது விழுவதால் கடல் நீரின் நிறம் நீலமாகிறது.நீருக்கு நிறங்கள் கிடையாது.நீர் அது இருக்கும் இடத்தை பொறுத்து நிறம் அடைகிறது.மேகம் கடல் நீரின் ஆவியாதல் தன்மையில் உருவாகிறது.அது மேகத்துக்கு சொந்தமில்லை.உடலில் இருக்கும் ஆன்மா உடலுக்கு சொந்தமில்லை.மனிதனின் இறப்பிற்கு பின் உடல் அழிந்து விடும்.ஆனால் உள்ளிருக்கும் ஆன்மா அழியாது.அது இன்னொரு உடலில் அடைக்கலம் ஆகி விடும்.ஆன்மா எந்த ஒரு உடலுக்கும் சொந்தமில்லை.நம்மை தொட்டு சென்றிடும் காற்று நமக்கு சொந்தமில்லை.அது இயற்கைக்கு சொந்தமானது.அது போலவே வாழ்வில் எல்லா உறவுகளும்,செல்வங்களும்,வெற்றிகளும் , தோல்விகளும் எதுவுமே நமக்கு சொந்தமில்லாதது.இதுவே இதன் பொருளாகும்.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
ரா.அனந்தராஜ்.....
HTML LINK TAMIL WEBSITES LINKS
இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....
உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
எனது தமிழ் கிறுக்கல்கள் :
அரசியல் கவிதைகள்
(3)
ஆன்மீக கவிதைகள்
(7)
கண் தானம் பற்றிய குறிப்புகள்
(5)
கவிதையாய் ஒரு பாடல்கள்
(5)
காதல் கவிதைகள்
(2)
தத்துவ கவிதைகள்
(10)
நட்பு கவிதைகள்
(4)
நம்பிக்கை கவிதைகள்
(5)
நல்ல கருத்து கவிதைகள்
(20)
நாட்டுப்பற்று கவிதைகள்
(2)
பொது கவிதைகள்
(35)
சனி, 20 மார்ச், 2010
கவிதை 45 : நிரந்தரமில்லா உலகில் நிரந்தரமானது எதுவோ?:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள்
. அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .
மீண்டும் வருவான் பனித்துளி !
கலக்கல் நண்பரே !
அருமையான சிந்தனை !
நன்றி நண்பரே
கருத்துரையிடுக