10 . வெற்றிக்கு ஓர் வழி :
நண்பனே
உன்
கோபங்களால் கொந்தளித்து விடாதே
உன்
அவமானங்களால் அழுது விடாதே
உன்
துக்கங்களால் துவண்டு விடாதே
அத்தனையும்
மண்ணுக்குள் புதைந்து இருக்கும்
வேரினை போல்
உன்
மனதுக்குள் அடக்கி வை
மண்ணுக்குள்ளே வேர் இருந்தால் தான்
மரமும் வளர்ச்சி பெறும்
அது போல்
உன்
மனதையும் அடக்கி இருந்தால் தான்
நீயும் வளர்ச்சி பெறுவாய்.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
ரா.அனந்தராஜ்.....
HTML LINK TAMIL WEBSITES LINKS
இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....
உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
எனது தமிழ் கிறுக்கல்கள் :
அரசியல் கவிதைகள்
(3)
ஆன்மீக கவிதைகள்
(7)
கண் தானம் பற்றிய குறிப்புகள்
(5)
கவிதையாய் ஒரு பாடல்கள்
(5)
காதல் கவிதைகள்
(2)
தத்துவ கவிதைகள்
(10)
நட்பு கவிதைகள்
(4)
நம்பிக்கை கவிதைகள்
(5)
நல்ல கருத்து கவிதைகள்
(20)
நாட்டுப்பற்று கவிதைகள்
(2)
பொது கவிதைகள்
(35)
வெள்ளி, 21 நவம்பர், 2008
செவ்வாய், 18 நவம்பர், 2008
My kavithai and பாடல் 9( 9. மனமுடைந்த துளி எதுவோ ? : (துளி என்று முடியும் படி கவிதையாய் ஒரு பாடல் )
9. மனமுடைந்த துளி எதுவோ ? : (துளி என்று முடியும் படி கவிதையாய் ஒரு பாடல் )
துளி துளி துளி துளி
ஓர் துளி மழைத்துளி
கடலில் காண்பது பலத்துளி
கண்ணில் பாயுது நீர்த்துளி
(துளி துளி )
மண்ணில் பிறந்ததும் ஓர் துளி
கண்ணில் வந்தது நீர்த்துளி
உலகைப் பார்த்தும் ஓர் துளி
சிரித்தேன் வந்தது நீர்த்துளி
(துளி துளி )
உறவை அறிந்ததும் ஓர் துளி
உண்மை கண்டதால் நீர்த்துளி
வாழ்வில் உள்ளது பலத்துளி
உறவும் அதிலே நீர்த்துளி
(துளி துளி)
நட்பை கண்டதும் ஓர் துளி
நிஜமாய் வந்தது நீர்த்துளி
வாழ்வில் அழகாய் ஓர் துளி
இதுபோல் உண்டா நீர்த்துளி
(துளி துளி )
காதலை கண்டதும் ஓர் துளி
மனசும் உடைந்ததால் நீர்த்துளி
ஆனந்தம் வந்தால் ஓர் துளி
அழுகை வந்தால் இத்துளி
(துளி துளி )
துளி துளி துளி துளி
ஓர் துளி மழைத்துளி
கடலில் காண்பது பலத்துளி
கண்ணில் பாயுது நீர்த்துளி
(துளி துளி )
மண்ணில் பிறந்ததும் ஓர் துளி
கண்ணில் வந்தது நீர்த்துளி
உலகைப் பார்த்தும் ஓர் துளி
சிரித்தேன் வந்தது நீர்த்துளி
(துளி துளி )
உறவை அறிந்ததும் ஓர் துளி
உண்மை கண்டதால் நீர்த்துளி
வாழ்வில் உள்ளது பலத்துளி
உறவும் அதிலே நீர்த்துளி
(துளி துளி)
நட்பை கண்டதும் ஓர் துளி
நிஜமாய் வந்தது நீர்த்துளி
வாழ்வில் அழகாய் ஓர் துளி
இதுபோல் உண்டா நீர்த்துளி
(துளி துளி )
காதலை கண்டதும் ஓர் துளி
மனசும் உடைந்ததால் நீர்த்துளி
ஆனந்தம் வந்தால் ஓர் துளி
அழுகை வந்தால் இத்துளி
(துளி துளி )
ஞாயிறு, 16 நவம்பர், 2008
my kavithai 8 : ( 8. ஒரு நொடியில் ஓர் உணர்வு) :
8 . ஒரு நொடியில் ஓர் உணர்வு :
உன்
ஒரு நொடி புன்னகை கூட
ஒரு துளி விஷம் ஆகும் - அடுத்தவர்
துன்பத்தில் நீ புன்னகைக்கும் பொழுது
உன்
ஒரு துளி கண்ணீர் கூட
ஒரு நொடி புனிதம் ஆகும் - அடுத்தவர்
துன்பத்தில் நீ அழும் பொழுது
உன்
ஒரு நொடி புன்னகை கூட
ஒரு துளி விஷம் ஆகும் - அடுத்தவர்
துன்பத்தில் நீ புன்னகைக்கும் பொழுது
உன்
ஒரு துளி கண்ணீர் கூட
ஒரு நொடி புனிதம் ஆகும் - அடுத்தவர்
துன்பத்தில் நீ அழும் பொழுது
my kavithai 7 : ( 7. நிஜம் காண்பது எப்போது?)
7 . நிஜம் காண்பது எப்போது? :
வெளிச்சத்தில் இருக்கும் வரை தான்
உன் நிழல் கூட
உன்னை தொடரும்
இருட்டினில் இருக்கும் போது
உன் நிழல் கூட
உன்னை தொடராது.
சில நேரங்களில் - இருட்டினில்
தீபமாய்
வாழ்வில் ஒளி தெரியலாம்
அந்த தீபம் போன்று - உன்
வாழ்வின் இருட்டினில்
ஒருவராவது உனக்கென
இருக்க பார் மனிதா
வெளிச்சத்தில் இருக்கும் வரை தான்
உன் நிழல் கூட
உன்னை தொடரும்
இருட்டினில் இருக்கும் போது
உன் நிழல் கூட
உன்னை தொடராது.
சில நேரங்களில் - இருட்டினில்
தீபமாய்
வாழ்வில் ஒளி தெரியலாம்
அந்த தீபம் போன்று - உன்
வாழ்வின் இருட்டினில்
ஒருவராவது உனக்கென
இருக்க பார் மனிதா
my kavithai 6 : ( 6. நட்பின் எல்லை)
6 . நட்பின் எல்லை :
நட்பு எனும் பூந்த்தோட்டத்தில் அழகான மலர்களை மட்டும்
வளர்க்கவும்
மலர்கள் வேண்டும் என்பதற்காக விஷ செடிகளை வளர்த்தால்
உன் அழகிய பூந்தோட்டமே அழிந்து விடும்.
நட்பு எனும் பூந்த்தோட்டத்தில் அழகான மலர்களை மட்டும்
வளர்க்கவும்
மலர்கள் வேண்டும் என்பதற்காக விஷ செடிகளை வளர்த்தால்
உன் அழகிய பூந்தோட்டமே அழிந்து விடும்.
my kavithai 5 : ( 5. நம்பிக்கை)
5 . நம்பிக்கை :
உணவில்லாமல் பல நாட்கள்
வாழ்ந்திடலாம்
நீரில்லாமல் சில நாட்கள்
வாழ்ந்திடலாம்
காற்றில்லாமல் சில நொடிகள்
வாழ்ந்திடலாம்
ஆனால்
நம்பிகைஇல்லாமல் ஒரு நொடி கூட
வாழ்ந்திடமுடியாது
உணவில்லாமல் பல நாட்கள்
வாழ்ந்திடலாம்
நீரில்லாமல் சில நாட்கள்
வாழ்ந்திடலாம்
காற்றில்லாமல் சில நொடிகள்
வாழ்ந்திடலாம்
ஆனால்
நம்பிகைஇல்லாமல் ஒரு நொடி கூட
வாழ்ந்திடமுடியாது
my kavithai 4 : (4. நிஜ பிம்பம்)
4 . நிஜ பிம்பம் :
உருவத்தை காட்டும் கண்ணாடியே
நீ
உள்ளத்தையும் காட்டினால் உனை
பார்ப்பவர் யாரோ?
உருவத்தை காட்டும் கண்ணாடியே
நீ
உள்ளத்தையும் காட்டினால் உனை
பார்ப்பவர் யாரோ?
my kavithai 3 : ( 3. இதயம் பேசுது)
3 . இதயம் பேசுது :
கடலில் தண்ணீரோடு
மீன்
மண்ணில் கண்ணீரோடு
நான்
தண்ணீருக்குள் மீனின்
சோகம்
கண்ணீருக்குள் மனதின்
சோகம்
மனதை புரிந்து கொள்பவர் யாரோ?
கடலில் தண்ணீரோடு
மீன்
மண்ணில் கண்ணீரோடு
நான்
தண்ணீருக்குள் மீனின்
சோகம்
கண்ணீருக்குள் மனதின்
சோகம்
மனதை புரிந்து கொள்பவர் யாரோ?
my kavithai 2 : ( 2. சில நேரங்களில் சில மனிதர்கள்)
2. சில நேரங்களில் சில மனிதர்கள் :
சில நேரங்களில் நாத்திகன் கூட மனிதன் ஆகிறான் -
அவனோட கடைசி நிமிடங்களில்
இறைவன் உண்டென நினைக்கும் பொழுது
சில நேரங்களில் ஆத்திகன் கூட மனிதனில்லாமல் ஆகிறான் -
அவனோட கஷ்ட நிமிடங்களில்
இறைவன் இல்லையென நினைக்கும் பொழுது .
சில நேரங்களில் நாத்திகன் கூட மனிதன் ஆகிறான் -
அவனோட கடைசி நிமிடங்களில்
இறைவன் உண்டென நினைக்கும் பொழுது
சில நேரங்களில் ஆத்திகன் கூட மனிதனில்லாமல் ஆகிறான் -
அவனோட கஷ்ட நிமிடங்களில்
இறைவன் இல்லையென நினைக்கும் பொழுது .
சனி, 15 நவம்பர், 2008
My first lyrics and கவிதை 1 (கல்லை மட்டும் கண்டால் பாடலின் வேறு வரிகள்)
கல்லை மட்டும் கண்டால் பாடலின் வேறு வரிகள்(என்னோட முதல் முயற்சி- தவறு இருந்தால் மன்னிக்கவும்)
மனமே ஒன்றானால்
உடனே சேர்த்துக்கொள்
மனமே வேறானால்
உடனே விட்டுச்செல்.
(மனமே ஒன்றானால்)
காதல் என்ற சொல்
மட்டும் தானே
வாழ்க்கை இல்லை என்று தெரியாதா
எங்கும் எதிலுமே
காதல் என்றால்
வாழ்க்கை என்பது புரியாதா
காதல் மட்டும் கண்டால்
காதல் நிலைப்பதில்லை
நேசம் எங்கும் கண்டால்
காதல் அழிவதில்லை
(மனமே ஒன்றானால்)
இன்பம் என்று சொன்ன பின்பும்
இன்பம் வராது
துன்பம் என்று சொன்ன பின்பும்
துன்பம் வராது
மூட நம்பிக்கை உள்ளவர் முன்னால்
எங்கள்
வீர நம்பிக்கை தோற்காது
மேகம் கலைந்து போனால் கூட
வானம் என்றுமே கலையாது
நாட்டில் உண்டு ஆயிரம்
ஜீவ ஜீவன் தான்
அந்த ஜீவனுக்கு ஜீவன்
அந்த இறைவன் ஒருவன் தான்
(மனமே ஒன்றானால்)
பொய்கள் என்றும் கூறினாலும்
உண்மை சாகாது
உண்மையான காதல் மட்டும்
என்றும் சாகாது
நாட்டில் பல பல
காதல் அழிந்தால் கூட
உண்மை காதல் தான்
அழிந்திடுமா
நட்பு என்றால் வாழ்வில்
நன்மை மட்டும் தான்
அந்த நட்பு மட்டும் தானே
எதுவும் எதிர்பார்த்திடுமா
காதல் என்று பார்த்தால்
வாழ்கை தெரியாது
வாழ்க்கை என்று பார்த்தால்
காதலும் கிடையாது
(மனமே ஒன்றானால்)
மனமே ஒன்றானால்
உடனே சேர்த்துக்கொள்
மனமே வேறானால்
உடனே விட்டுச்செல்.
(மனமே ஒன்றானால்)
காதல் என்ற சொல்
மட்டும் தானே
வாழ்க்கை இல்லை என்று தெரியாதா
எங்கும் எதிலுமே
காதல் என்றால்
வாழ்க்கை என்பது புரியாதா
காதல் மட்டும் கண்டால்
காதல் நிலைப்பதில்லை
நேசம் எங்கும் கண்டால்
காதல் அழிவதில்லை
(மனமே ஒன்றானால்)
இன்பம் என்று சொன்ன பின்பும்
இன்பம் வராது
துன்பம் என்று சொன்ன பின்பும்
துன்பம் வராது
மூட நம்பிக்கை உள்ளவர் முன்னால்
எங்கள்
வீர நம்பிக்கை தோற்காது
மேகம் கலைந்து போனால் கூட
வானம் என்றுமே கலையாது
நாட்டில் உண்டு ஆயிரம்
ஜீவ ஜீவன் தான்
அந்த ஜீவனுக்கு ஜீவன்
அந்த இறைவன் ஒருவன் தான்
(மனமே ஒன்றானால்)
பொய்கள் என்றும் கூறினாலும்
உண்மை சாகாது
உண்மையான காதல் மட்டும்
என்றும் சாகாது
நாட்டில் பல பல
காதல் அழிந்தால் கூட
உண்மை காதல் தான்
அழிந்திடுமா
நட்பு என்றால் வாழ்வில்
நன்மை மட்டும் தான்
அந்த நட்பு மட்டும் தானே
எதுவும் எதிர்பார்த்திடுமா
காதல் என்று பார்த்தால்
வாழ்கை தெரியாது
வாழ்க்கை என்று பார்த்தால்
காதலும் கிடையாது
(மனமே ஒன்றானால்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)