வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

புதன், 27 மே, 2009

my kavithai 23 : (23 . காதல் ஒரு வரமா?. அல்லது சாபமா?. )

23 . காதல் ஒரு வரமா?. அல்லது சாபமா?.

யார் செய்த பாவம் இங்கே
உன் கண்ணில் நான் விழுந்தேன்

யார் செய்த பாவம் அங்கே
என் கண்ணில் நீ விழுந்தாய்

இது காதல் என்பதா
இல்லை சாபம் என்பதா

இது நேசம் என்பதா
இல்லை வேஷம் என்பதா
உயிரே சொல்

மனம் காயமுற்று
தனியாய் இருக்கையில்
என் உள்ளினுள்ளே
உறவாட வந்தாயே

மனக் காயக்கதைகள்
எல்லாம் சொல்லிட
உயிர் மருந்தாவேன்
நீயே சொல்லிட

காதலில் விழுந்தேனே
உன்
காதலால் வீழ்ந்தேனே

பாறையாக என்
மனமே இருக்கையில்

சிற்பியாக நீயே
இங்கு வருகையில்

பாறையும் சிலையானதே
எனதுள்ளமும் உனதானதே

கண் கொண்டு பார்த்தால்
கல் மட்டும் தோன்றும்

மனக்கண் கொண்டு பார்த்தால்
கடவுளே கண்முன் தோன்றும்

ஒன்றல்ல இரண்டல்ல
வாழ்க்கை பதிவின் - பலதிலும்
நம்பிக்கை விதைகளை
விதைத்தேனே

எதன் மீதும் நம்பிக்கை இல்லையெனின்
நானே தந்திடுவேன் நம்பிக்கையினை
என் மீதே நம்பிக்கை இல்லையெனின்
நான் எங்கு போய் காதலை உன்னிடத்தில் தேடுவேன்?.

வாழ்வில் எதுவில்லை எனினும்
ஓர் நொடி கூட வாழ்ந்திடலாம்

நம்பிக்கை இல்லையெனின்
ஓர் நொடி கூட வாழ்ந்திட முடியாது
இதில் காதல் மட்டும் என்ன விதி விலக்கா?.

தனியாக இருக்கையில்
துன்பம்கூட தூசியானது

காதலின் வருகையில்
இன்பம்கூட துன்பமானது

காதல் எனும் மரத்தில்
உள்ளம் எனும் கூட்டை
கட்ட நினைத்தேன்

மரமே சாய்ந்த பிறகு
கூட்டிற்கு என்ன வேலை?

உன்னாலே மீண்டும்
மனம் கல்லானதே

ஓர் நொடி புன்னகையில்
உன்னிடத்தில் தொலைந்தேன்
ஓர்நொடியால் இன்று
என்புன்னகையையே மறந்தேன்

காதல் இது வரமா?. சாபமா?.

ஞாயிறு, 10 மே, 2009

my kavithai 22 : (22. ஓர் நொடி முடிவில் நம் வாழ்க்கை மாற்றம் உண்டென்பது நிஜம் )

22.ஓர் நொடி முடிவில் நம் வாழ்க்கை மாற்றம் உண்டென்பது நிஜம்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

அர்த்தமுள்ளதும் ஓர் நொடியில் தான்
ஆயிரமுள்ளதும் ஓர் நொடியில் தான்
அச்சம் வருவதும் ஓர் நொடியில் தான்
அகண்டு நிற்பதும் ஓர் நொடியில் தான்

(ஓர் நொடி போதும் )

மண் ஆசையில் மாண்டு போவதும்
ஓர் நொடியில் தான்

பெண் ஆசையில் பித்தன் ஆவதும்
ஓர் நொடியில் தான்

இதயம் தொலைத்து நிற்பதும்
ஓர் நொடியில் தான்

நினைவை இழந்து நிற்பதும்
ஓர் நொடியில் தான்

வார்த்தை தவறி விழுவதும்
ஓர் நொடியில் தான்

வாழ்க்கை மாறி விடுவதும்
ஓர் நொடியில் தான்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்

(ஓர் நொடி போதும் )

நட்பினில் யாவரும் வருவதற்க்கு
ஓர் நொடி போதும்

நட்பினில் சிறந்தவன் கிடைப்பதற்க்கு
ஓர் யுகம் வேண்டும்

நாத்திகன் ஆக ஆவதற்கு
ஓர் நொடி போதும்

ஆத்திகன் ஆக ஆவதற்கு
ஓர் யுகம் வேண்டும்

காதலில் விழுவதற்கு
ஓர் நொடி போதும்

விழுந்தால் எழுவதற்க்கு
ஓர் யுகம் வேண்டும்

தவறு செய்திட
ஓர் நொடி போதும்

வாழ்க்கை மாறிட
ஓர் யுகம் வேண்டும்

யுத்தம் பிறந்திட
ஓர் நொடி போதும்

அமைதி திறிம்பிட
ஓர் யுகம் வேண்டும்

ஓர் நொடி போதும்
நம் வாழ்க்கை மாறிட
ஓர் நொடி போதும்