வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கவிதை 44 : ஞானமும்,காதலும் ஒன்று தானோ? :

கவிதை 44 : ஞானமும்,காதலும் ஒன்று தானோ? :

ஞானம் பிறக்கையிலே
மனம்
தனிமை நாடி செல்லுது

காதல் பிறக்கையிலே
மனம்
அன்பை நாடி செல்லுது

ஞானமும்,காதலும் ஓர் நிலையில்
ஒன்று தானோ?

இன்பத்தை துறந்து
துன்பத்தை மறந்து

மனிதனென்பதை கடந்து
துறவியாகி புனிதனானான்
ஞானி!

ஆசைகளை குறைத்து
விட்டுகொடுத்து வாழ்ந்து

அன்பென்பதை கலந்து
காதலாகி அன்புடையவனானான்
காதல் யோகி!

காலங்கள் சிலவும் கடந்ததால்
காட்சிகள் பலவும் மாறியதால்

ஆன்மீகத்திலே போலியும்
பெருகிடுச்சி!
காதலிலே பொய்களும்
வளர்ந்திடுச்சு!

காலம் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
இயற்கையின் சாட்சி
சூரியன் மாறுவதில்லை

சூரியன் சாட்சியாய்
உண்மை ஞானிகள் இன்றும்
சிலருண்டு
உண்மை காதல்கள் இன்றும்
சிலவுண்டு

உண்மை ஞானிகளின் அன்பு
பெருகட்டும்
உண்மை காதலின் ஆயுள்
வளரட்டும்..

பொருள் : இவ்வுலகில் இன்றும் சில உண்மையான ஞானிகள் வாழ்வதுண்டு.இவ்வுலகில் இன்றும் சில உண்மையான காதல்கள் வாழ்வதுண்டு.எல்லா ஞானிகளும் ஞானிகளல்ல.எல்லா காதல்களும் காதலல்ல.ஞானி என்பவர் சுக போகங்களை துறந்து ஏதுமில்லாமல் வாழ்பவர்.இங்கே சிலர் ஞானி என்று சொல்லி கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.இவர்கள் ஞானிகளா?.காதல் என்பது விட்டு கொடுத்து வாழ்வது,அன்பை எல்லோரிடத்தும் செலுத்துவது,எத்தனை எதிர்ப்பு வந்திடினும் எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறுவது.இங்கே எத்தனை காதல்கள் காதலாக உள்ளது?.சில நேரங்களில் ஞானமும்,காதலும் ஒன்று தானோ என்று என்ன தோன்றுகிறது.உண்மை ஞானம் அன்பை விதைக்கட்டும்.உண்மை காதல் அன்பை வளர்க்கட்டும்,அதன் ஆயுளும் கூடட்டும்..

சனி, 13 பிப்ரவரி, 2010

கவிதை 43 : தனிமை! புதுமை! (கவிதையாய் ஒரு பாடல் )

கவிதை 43 : தனிமை! புதுமை! (கவிதையாய் ஒரு பாடல் )

தனிமை! புதுமை!
தனிமை! இனிமை!
தனிமை வருகையில்
புதுமை பிறக்குமே
இனிமை!
தனிமை! புதுமை!

(தனிமை! புதுமை!....)

ஞானம் வருகையில்
தனிமை பிறக்குமே
இனிமை!

சோகம் வருகையில்
தனிமை பிறக்குமே
புதுமை!

தனிமை! புதுமை!

(தனிமை! புதுமை!...)

தூக்கம் வருகையில்
தனிமை பிறக்குமே
இனிமை!

மரணம் வருகையில்
தனிமை பிறக்குமே
புதுமை!

தனிமை! புதுமை!

(தனிமை புதுமை..)

பொருள் : ஞானம் வருகையில் வரும் தனிமை இனிமையானது.சோகம் வருகையில் வரும் தனிமை புதுமையானது.தூக்கம் வருகையில் வரும் தனிமை இனிமையானது.மரணம் வருகையில் வரும் தனிமை புதுமையானது.தனிமையில் சில எண்ணங்களின் வெளிப்பாடே இக்கவிதை.இதுவே பொருளாகும்...