வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

கவிதை 48 : ஓ மனிதா!

கவிதை 48 : ஓ மனிதா!

ஓ மனிதா!

வானுக்கும் எல்லையில்லை
பூமிக்கும் எல்லையில்லை

எல்லையெனும் சொல்லுக்கே
எல்லையில்லாத போது

வெற்றிக்கு எல்லையென
எதை எண்ணி மகிழ்வாய்?.

நேற்றொருவர் வெற்றியொனை
கண்டார்.
இன்றொருவர் முறித்திடவே
நின்றார்.
நாளையொருவர் படைத்திடவே
நிற்பார்.

முறியடிக்கும் வரை
அதுவே
எல்கை என்பாய்.

முறியடித்த பின்பு
அதுவும்
எல்கை என்பாய்.

எல்கையெனும் கோடு
உன்னை சிறை போட்டிடும்
மாயை!

ஓடு! ஓடு!
பின்னொருவர் உன்னை
கடந்த வருகிறாரென
எண்ணி
ஓடி கொண்டே இரு.....

சனி, 24 ஏப்ரல், 2010

கவிதை 47. முகங்களுக்குள் எத்தனை முகங்கள் :

கவிதை 47. முகங்களுக்குள் எத்தனை முகங்கள் :

முகம் !

நீ ஜனனித்த வேளையிலே
நீ அழுகின்ற வேளையிலே

உன் முகம் அழுதிடவும்
பிறர் முகம் சிரித்திடவும்

விந்தையாய் சிந்திக்க
வைத்திடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

பிறர் துன்பத்தை
நீ சிரித்திடும் வேளையிலே
உன் முகத்தை
நீ காட்டிடும் வேளையிலே

உன் நிழல் முகங்கள் கிழிந்து
உன் நிஜ முகங்கள் பதிந்து

உண்மையை உலகுக்கு
காட்டிடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

உன் அக பயத்தினை வெளிக்கொனராது
உன் அக உணர்வினை புறந்தள்ளாது

உன் மனம் கோழையாய் இருந்திடினும்
பிறர் மனம் வீரனாய் நினைத்திடவே

உனை ஆக்கிட
செய்திடும் - ஓர்
ஆள் காட்டி

முகம் !

உன் துக்கத்தை வெளிக்காட்டிடும்
உன் இன்பத்தை வெளிக்காட்டிடும்

கடந்தவையும் காட்டிடும்
நடப்பவையும் காட்டிடும்

பொய்யான மானிரடத்தில்
பொய்கள் எப்போதும்
உண்டுமென சொல்லாமல்
காட்டிட செய்திடும் - ஓர்
ஆள் காட்டி....................

திங்கள், 19 ஏப்ரல், 2010

கவிதை 46 : நீயாகி ஏன் நானானேன்? :

கவிதை 46 : நீயாகி ஏன் நானானேன்? :

உன் எண்ணமே
என் எண்ணமாய்

உன் செய்கையே
என் செய்கையாய்

இவ்வுலகில்

நான் மட்டும்
உனை போல
ஏன் ஆனேனோ?

உன் பிழைகளே
என் பிழைகளாய்

உன் தவறுகளே
என் தவறுகளாய்

நான் எண்ணாமல்
எனக்குள் புகுந்தது
ஏனோ?

இங்கு நீ யாரோ ?
இங்கு நான் யாரோ ?

உன் கருவில் நானாகி
வந்ததினால்
நீயே என் தாயானாய்

உன் உயிரில் கருவாகி
வந்ததினால்
நானே உன் சேயானேன்

பொருள் : கருவுற்று இருக்கும் பெண்கள்,அந்த காலங்களில் என்ன நினைக்கிறார்களோ,என்ன செய்கிறார்களோ அதுவே பல நேரம் அந்த சிசுவுக்கும் சென்றைடையும்....இந்நேரங்களில் பெண்கள் நல்லதை செய்தால் நல்லது,நல்லதை நினைத்தால் நல்லது...பெண்களுக்கு மட்டுமல்ல உங்கள் சிசுவுக்கும்.....உங்களால் ஏதுமறியா சிசுவும் எண்ணம் மாறி விட கூடாது......