வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

புதன், 28 ஜனவரி, 2009

my kavithai 21 : ( 21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ? )

21. ஊனமென்பது உடலா? or உள்ளமா ?

(உடலில் உள்ள குறை எல்லாம் ஊனம் இல்லை,உள்ளம் குறையானால் அது தான் ஊனம் ( அவரும் மனிதர் தான்,நேசிப்போம் அந்த ஜீவனையும் தான்.நண்பர் ஒருவருக்காக படைக்க பட்டது - அவருக்கே சமர்பனம் இது ) ) :

விடையறியா உலகத்தில்
வினாக்களின் கூட்டத்தில்
ஓர் ஜீவனாய்
நாமும் பயணிக்கின்றோம்

விடையறியும் முன்னே
இறங்க நினைக்கையில்
பாதையும் வேறாகி
பயணமும் முடிகிறது

வினாக்களே பிறக்க
வில்லையெனில்
பயணமும் எதற்கோ ?

பாதியில் இறங்கத்தான்
உன் பயணமென்றால்
நீ
பயனியானது ஏனோ?

கண் இருந்தும் பார்வையில்லை
மொழி தெரிந்தும் பேசவில்லை
நடை அறிந்தும் நடக்கவில்லை

வினாக்கள் எத்தனை பிறந்தாலும்
விடையறிய ஓர் ஜீவனாய்
அவனும் பயணிக்கிறான்

அவனுக்கோ
ஊனம் ஓர் தடையில்லை
உனக்கோ
உள்ளமே ஓர் ஊனமானது

நண்பனே
நம்பிக்கையை அவரிடம்
பெற்றுக்கொள்
வாழ்க்கையை அவரிடம்
கற்றுக்கொள்

வாழ்ந்து பார்
உனக்கான ஓர் உலகம்
நிட்சயம் உண்டு

வாழ்ந்து பார்க்காமல்
மடிந்து விடாதே

வியாழன், 22 ஜனவரி, 2009

my kavithai 20 : ( 20 . ஓர் கோர்வையாகி பூ மாலையாவோம் ?(பிரிவு எங்கும் வேண்டாம்)

20.ஓர் கோர்வையாகி பூ மாலையாவோம் ?(பிரிவு எங்கும் வேண்டாம்)

பூக்களில் ஓர் பூ மட்டும்
மாலையாகிவிடாது

மரங்களில் ஓர் மரம் மட்டும்
தோப்பாகிடாது

எழுத்துக்களில் ஓர் எழுத்து மட்டும்
வார்த்தையாகிவிடாது

நூல்களில் ஓர் நூல் மட்டும்
நூலகமாகிவிடாது

கற்களில் ஓர் கல் மட்டும்
கட்டிடமாகிவிடாது

நீர்களில் ஓர் துளி மட்டும்
கடலாகிவிடாது

எல்லாம் சேர்ந்து இருந்தால் தான்
ஓர் கோர்வையாக உருமாறும் .

வாழ்க்கையும் இது போல தானே

மதத்தின் பெயரால்
ஜாதியின் பெயரால்
இனத்தின் பெயரால்
நாம் வேறுபட்டு இருந்தாலும்

மனம் என்ற ஒன்றில்
இணைந்தே இருப்போம்

மதம் என்பது
மனதை தெளிவுபடுத்ததானே அன்றி
மனதை காயப்படுத்த அல்ல

மதத்தின் பெயரால் பிரிவு வேண்டாம்
மனங்களால் நாம் ஒன்றாய்
இருப்போம்

நட்புடன் பழகுவோம்
என்றும் நட்புடன் மட்டும் இருப்போம்

புதன், 21 ஜனவரி, 2009

my kavithai 19 : ( 19. கவிதையாய் ஒரு கதை )

19.கவிதையாய் ஒரு கதை :

ஓர் நாள்
நானும்,என் நண்பனும்
நடைவீதியில் சென்று கொண்டு இருந்தோம்.

முதல் நாள்
அவன் பேசினான்.

நான் அழகிய மலர் ஒன்றை கண்டு எடுத்தேன்
இது போல்
என் வாழ்வில் இனி மலர் கிட்டுமா
தெரியவில்லை என்றான்

நான் ஒன்றும் சொல்ல வில்லை
வந்து விட்டேன்

மறு நாளும்
அவன் பேசினான்

நான் பல மலர்களை பெற்று இருக்கிறேன் என்றான்

நான் பதில் எதுவும் சொல்லாமல்
சென்று விட்டேன்.

இன்னுமொரு நாள்
நாங்கள் சந்தித்தோம்

நான் ஓர் மலர் தோட்டமே பெற்று இருக்கிறேன் என்றான்

நான் மௌனமாக சென்று விட்டேன்

பல நாட்களுக்கு பிறகு
நாங்கள் சந்தித்தோம்

அன்று
நான் பேசினேன்
அவன் மௌனமாக இருந்தான்
அவன் மௌனத்தை கலைத்து
உண்மையை அறிந்தேன்

மலர்கள் அதிகம் வேண்டும் என்பதற்காக
விஷ செடியையும் வளர்த்து விட்டேன்
அதனால் இன்று
நான் முதன் முதலாய்
நேசித்த என் அழகிய மலரும்
கருகி போய் விட்டது

இன்று நான் தனிமையில்
கண்களில் ஓரம் ஈரத்தோடு

உயிர் வாழ சுவாசம் முக்கியம் தான்
சுவாசம் வேண்டும் என்பதற்காக
எல்லா காற்றையும் சுவாசித்தால்
ஜீவன் இருக்காது

அது போல் தான் நல்ல நட்பும்

நட்பு வேண்டும் என்பதற்காக
எல்லோரையும் நண்பனாக சேர்த்தால்
முடிவில் உன் நல்ல நண்பர்களும் இல்லாமல்
சென்று விடுவார்கள்

my kavithai 18 : ( 18. தன்னம்பிக்கை )

18. தன்னம்பிக்கை :

வெற்றியை பறிப்பதற்கு
உன் கைகள் துணை இருந்தாலும்
அதனை தடுப்பதற்கு - இவ்வுலகில்
ஆயிரம் கைகள் காத்து கொண்டு
இருக்கின்றது

எத்தனை கைகள் தடுத்தாலும்
உன்
தன்னம்பிக்கை என்ற கை
உன்னில் இருக்கின்ற வரை
அத்தனையும் உன் காலடியில்
சமர்ப்பணம்

செவ்வாய், 20 ஜனவரி, 2009

my kavithai 17 : ( 17. காதலின் ஆழம் )

17 . காதலின் ஆழம் :

களவும் கற்று மற என்றார்கள்
காரணம் தெரியவில்லை

ஆனால்
காதலை சொல்லவில்லை
ஏனோ புரியவில்லை

நினைத்தவுடன் வருவதற்கும்
நினைத்தவுடன் மறப்பதற்கும்

காதல் ஒன்றும்
வாழ்க்கையின் வழி அல்ல
அது
வாழ்க்கையின் வலி.

வெற்றி பெற்றால் மட்டுமே காதல்
நினைக்க வேண்டும் என்றால்

அவன் காதலை அறியவில்லை
என்று தான் அர்த்தம்

தோல்வி அடைந்தால் காதலை
மறக்க வேண்டும்

என்று சொன்னால் உண்மையில்
அவன் காதலிக்கவில்லை
என்று தான் அர்த்தம் .

மனதின் ஓரமாய்
அந்த காதல் ஜனனத்தின்
முடிவு வரை
இருந்தால் தான்
அது உண்மையான காதல்
(காதலில் வெற்றியோ ,தோல்வியோ ,மனதின் ஓரமாய் அதை நினைத்திரு.).

my kavithai 16 : ( 16 . எது வரை எல்லாம் அழகு?(பஞ்ச பூதங்கள் ) )

16 . எது வரை எல்லாம் அழகு?(பஞ்ச பூதங்கள் ) :

வானம் அழகானது தான்
வெளிச்சமாய் இருக்கும் வரை

காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை

நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை

நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை

பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை

நட்பு அழகானது தான்
காதல் வராத வரை

my kavithai 15 : ( 15 . தூரத்தில் நிற்காதே , அருகில் இரு )

15 . தூரத்தில் நிற்காதே , அருகில் இரு :

கடல் மீது ஒருவன்
தத்தளிக்கையில்
கரை மீது நின்று
உரையாடுகிறான்

கடல் மீது ஏனடா
விழுந்தாய் என்றான் ஒருவன் -
கரை மீது நின்று கொண்டு

கடல் மீது எவ்வாறடா
விழுந்தாய் என்றான் இன்னொருவன் -
கரை மீது நின்று கொண்டு

கடல் மீது விழுந்ததினால்
கண்ணீரினில்
விழுந்தான் இன்னுமொருவன் -
கரை மீது நின்று கொண்டு

பயனில்லா கேள்வியும்
பலனில்லா அழுகையும்
நீ கொடுத்தால்
அவன் கரை சேர்ந்து விடுவானா

எதை கொடுத்தால்
அவன் கரை சேர்வானோ
அதை செய்

அடுத்தவர் துன்பம் கண்டு
கண்ணீர் சிந்துபவனாக இருக்காதே
கண்ணீர் துடைப்பவனாக இரு

இதயத்திலோ வலி
கண்களோ கண்ணீர் சிந்துகின்றது
கைகளோ கண்ணீரை துடைக்கின்றது

கண்ணீர் சிந்தும்
கண்களாய் இருக்காதே
துடைத்து நிற்கும்
கைகளாய் இரு .

புதன், 14 ஜனவரி, 2009

my kavithai 14 : ( 14 . வாழ்ந்து பார் வாழ்க்கை புரியுமே ?)

14 . வாழ்ந்து பார் வாழ்க்கை புரியுமே ? :

இம்மண்ணுக்காக நீ
வீழ்வதாக இருந்தால்
இம்மண்ணின்
ஒவ்வோர் மைந்தனும்
கண்ணீர் சிந்துவானே - உனக்காக

அதுவில்லாமல்

ஓர் பொண்ணுக்காக நீ
வீழ்வதாக இருந்தால்
இம்மண்ணின்
கடைசி ஜீவனும் கூட
ஓர் துளி கண்ணீர் சிந்தலாகாது

தண்ணீரை நிலைநிறுத்த
அணைக்கட்டை கட்டினான்
உன்
கண்ணீரை நீ நிலை நிறுத்த
மனமென்பதை கட்டு

ரசிகன் என்று நீ இருக்கையில்
நடிகன் என்பவன்
நடித்துக்கொண்டே தான் இருப்பான்
சினிமாவில் மட்டுமல்ல
நிஜத்திலும் தான்

கடல் அலையை தூரத்தில்
நின்று ரசித்து செல்லலாம்
இல்லை
நான் கடலில் இறங்கியே
ரசிப்பேன் என்றால்
மூச்சடைத்து விடுவாய் நண்பனே

தொண்டன் என்று நீ இருக்கையில்
அரசியல் செய்பவன்
அடித்துக்கொண்டே தான் இருப்பான்
நாட்டை மட்டுமல்ல
உன் வீட்டையும் தான்

நீ தீக்குளித்து மேலே
செல்வாய்
அவன்
நீ குளிக்க மேலே
உயர்வான்

எதை விதைக்கிறாயோ
அதுவே
மரமாக வளரும்
விதைப்பதை தவறாக விதைத்து விட்டு
பலனை மட்டும் எதிர்பார்க்கிறாயே

மாண்டு போவதால்
உன் வாழ்க்கையை
மீட்டு விடுவாயா
வாழ்ந்து பார்
வாழ்க்கை புரியும்
நீயாக நீ இருக்கையில்
மாண்டே போ
உனக்காக பலர் இருக்கையில்
மாண்டும் மீண்டும் இருப்பாய்

செவ்வாய், 13 ஜனவரி, 2009

my kavithai 13 : ( 13. எது வந்த போதும் ஏற்றுகொள் மனமே)

13 . எது வந்த போதும் ஏற்றுகொள் மனமே :

காதலில் விழுந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

காதலில் வீழ்ந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
ஏற்றுக்கொண்டது என் இதயம்
அவன் உண்மையான நேசம் மட்டுமன்றி
அந்த காதலையும் தான்

வெற்றி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

தோல்வி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் நம்பிக்கையை மட்டுமன்றி
அந்த கடவுளையும் தான்

ஆத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
நாத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொள்ளவில்லை - என் நெஞ்சம்

நாத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
ஆத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் உண்மை அறிந்ததற்காக மட்டுமன்றி
அவனின் உள்ளத்தையும் தான்

உன் மனமென்பதை
நிலையாக வைத்திருக்காவிடில்
விடை அறியா
கேள்வியாகி விடுமே உன் வாழ்க்கை ?.

திங்கள், 5 ஜனவரி, 2009

my kavithai 12 : ( 12. உன் வாழ்க்கை உன் கையில்)

12. உன் வாழ்க்கை உன் கையில் :

வாழ்க்கையில்
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவனாக
நீ இருந்தால்
-உன் வாழ்க்கை உன் கையில்

நம்பிக்கையை
எந்த நிமிடமும் கைவிடாமல்
நீ இருந்தால்
-உன் வாழ்க்கை உன் கையில்

தவறுகளில்
வாழ்க்கையை திருத்திகொள்பவனாக
நீ இருந்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

வெற்றிகள்
எல்லா நிமிடமும் இறைவனால் வருவது என
நீ நினைத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

நட்பினில்
நம்பிக்கை உள்ளவரை
தேர்ந்தெடுத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில்

காதலில்
விட்டுகொடுக்கும் மனம் உள்ளவரை
தேர்ந்தெடுத்தால்
- உன் வாழ்க்கை உன் கையில

உண்மையில்
உன்னை நீ
அறியாத வரை
உலகை நீ அறிய மாட்டாய்

உன்னை நீ
அறிந்து கொண்டால்
உலகம் நாளை
உன் கையில்

குறிப்பு :
உலகை மாற்ற நினைப்பதற்கு முன்
முதலில்
உன்னை நீ மாற்று