வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTEஎனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

Sunday, January 31, 2010

கவிதை 41 : நீயும் பொம்மை! நானும் பொம்மை! நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை! :

கவிதை 41 : நீயும் பொம்மை! நானும் பொம்மை! நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை! : ( கவிதையாய் ஒரு பாடல் )
யாருக்கும் யாரும் இங்கே நண்பனில்லை
யாருக்கும் யாரும் இங்கே பகைவனில்லை
ஏட்டினில் எழுதி வைத்தான்
இறைவன் அன்றோ!
பொம்மையாய் நாமும் வந்தோம்
உலகில் இன்றோ!
( யாருக்கும் யாரும் ... )
பஞ்சபூதமும் அவனே படைத்தான்
ஐம்புலனும் அவனே கொடுத்தான்
ஆசை,கோபம் இரண்டுமிங்கே
ஆயுள் முழுதும் படைத்தானே!
ஜீவராசி அவனே படைத்தான்
ஜீவனதை அவனே கொடுத்தான்
இன்பம்,துன்பம் இரண்டுமிங்கே
வாழ்க்கை முழுதும் படைத்தானே!
மெய்கள் ஒன்று இருந்தாலே
பொய்கள் ஒன்று இங்குண்டு
உண்மையாவும் கண்டு கொள்ள
ஆறாம் அறிவை படைத்தானே!
( யாருக்கும் யாரும் ... )
ஜனனமென்ற தண்டனை கொடுத்தான்
மரணமென்ற விடுதலை வைத்தான்
புரியாத புதிர்களுக்கிங்கே விடைகள்
ஒன்றை வைத்தானே!
பொய்களென்ற சரீரம் கொடுத்தான்
மெய்களென்ற உயிரை வைத்தான்
பொய்களில்லா மெய்களுக்கிங்கே கேள்வி
ஒன்றை வைத்தானே!
நவத்துவாரம் உடலில் கொடுத்தான்
நாட்கள்தோறும் திறந்தே வைத்தான்
உடலிலிருக்கும் உயிர்களுக்கிங்கே பூட்டு
ஒன்று வைத்தானே!
பூட்டி அவனும் நின்றானே!
(யாருக்கும் யாரும் ... )

பொருள் : பஞ்சபூதம் என்பது யாதெனில் நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று.ஐம்புலன்கள் என்பது யாதெனில் மெய்(மெய்யாகிய உடல்),வாய்,கண்,மூக்கு,செவி.அத்தனையும் நாம் கண்டிராத நமக்கு மேல் உள்ள ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டது என்பது மெய்.ஆறாம் அறிவு என்பது மெய்,பொய் என்பதை கண்டறிவதற்க்காக படைக்கப்பட்டது.ஓரறிவில் இருந்து ஐந்தறிவு உள்ள ஜீவன்கள் உணர முடியாதது ஆறறிவு உள்ள ஜீவன் உணர்வது.ஜனம் என்பதை தண்டனையாக எடுத்து கொள்.அங்கே,மரணம் என்பது விடுதலையே.மரணம் கண்டு மனிதா பயப்படாதே.மரணம் என்பது ஒரு புரியாத புதிர்.ஆனாலும் அங்கே விடைகள் ஒன்று உண்டு.நம் சரீரம் என்பது பொய்யானது.அதனுள் இருக்கும் உயிராகிய ஆன்மாவே மெய்யானது.இதை புரிந்து கொள்வது கடினம்.அதனால் தான் அங்கே ஒரு கேள்வி வைத்தான்.நவத்துவாரம் என்பது யாதெனில் இரண்டு கண் துவாரம்,இரண்டு செவி துவாரம்,இரண்டு நாசி துவாரம்,ஒரு வாய் துவாரம்,ஒரு ஜல துவாரம்,ஒரு மல துவாரம்.நம் உடலில் இது அத்தனையும் திறந்தே வைத்தான்.நம் உடலில் இருக்கும் உயிர்கள் எந்த துவாரம் வழியாகவும் எப்போது வேண்டும் என்றாலும் வெளியே போகலாம்.
இருந்தும் ஏதோ ஒரு சக்திக்குக்கு கட்டுப்பட்டு உள்ளேயே உள்ளது.அதன் நேரம் வரும் போது அது ஏதோ ஒரு துவாரம் வழியே வெளியே செல்லும்.யார் நம்புவதற்காகவும் இந்த கவிதையை படைக்க வில்லை.நான் நம்புகிறேன்.நம்பாதவர்கள் விவாதம் செய்யாதீர்கள்.உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு கருத்து உண்டு

No comments: