வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTEஎனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

Sunday, September 27, 2009

கவிதை 30 : (30 . எனக்கான முதல் கவிதையும் இது தானோ? ) :

கவிதை 30 : எனக்கான முதல் கவிதையும் இது தானோ?:

என் கவிதையின் முதல் பயணம்
எங்கே உதயமானது?
இன்றளவும் எனக்கு தெரிய வில்லை

என் வாழ்க்கைப் பதிவில்
காயங்கள் நெஞ்சில் பதிய பதிய
வாழ்க்கை கொஞ்சம் புரிய புரிய

என்னை அறியாமலே
என் எண்ணங்கள் செதுக்கப்பட்டு
அவை எழுத்துக்களில் ஈட்டப்பட்டு

கவிதையென்பதில் முதல் அடியை
எடுத்திடவே காரணமானதே

நீரெல்லாம் சேர்ந்து
கடலாய் இருக்கையில்
அதிலே
மீன் அழுதால்
யாருக்கும் தெரிவதுமில்லை

எனது எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து
கவிதையாய் இருக்கையில்
அதிலே
என் சோகமும்
யாருக்கும் புரிவதுமில்லை

இருந்தும்

துக்கத்தின் ஒரு பகுதியை
எனது எழுத்துக்களால்
என் காயத்தை துடைத்திடவே
பார்க்கிறேன்

துக்கத்தின் மறு பகுதியை
எனது எழுத்துக்களால்
பிறர் கண்ணீரை தடுத்திடவே
பார்க்கிறேன்

காயங்களிலான வாழ்க்கை
யாருக்கும் வேண்டாம்
நான் நினைக்க வில்லை

இன்பங்கள் போன்று
துன்பங்கள் வந்திடினும்
அவையெல்லாம்
எதிர்கொள்ளும் பக்குவங்கள்
இருந்திடவே நினைக்கிறேன்

துன்பமில்லாமல் இன்பமுட்டும்
வேண்டுமெனில்
மனித பிறப்பும் தேவை தானோ?

என் எழுத்துக்கள் கவிதையாகுதே
இதையெண்ணி
மகிழ்ச்சி கொள்வதா?
இல்லை
என் சோகங்கள் எழுத்துக்கள் ஆகுதே
இதையெண்ணி
வருத்தம் கொள்வதா?.

ஒன்றல்ல இரண்டல்ல
முப்பது கவிதைகள்
எவ்வாறோ என்னால்
படைக்கப்பட்டு விட்டது

நான் கவிஞனில்லை
இருந்தும்
எப்படி படைத்தேன்
இதுவரை
எனக்கும் புரிய வில்லை

எத்தனையோ கவிதைகள்
யார் யாருக்காவோ படைத்தேன்
எனக்காக - நான்
படைத்த "முதல் கவிதை"
இது தானே.

No comments: