வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTEஎனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

Tuesday, May 4, 2010

கவிதை 49 : நானும் ஒரு தொழிலாளியே !

கவிதை 49 : நானும் ஒரு தொழிலாளியே !

தொழிலார் தினம்
கலந்து கொள்ள
வேண்டி

பரிவுடன் ஒரு விண்ணப்பம் !

சுற்றுப்புற சிர்கேடை
தடுக்க எண்ணினேன்

சுட்ட செங்கற்களை
தூக்கி எறிந்தேன்

குழந்தை தொழிலாளர்களை
ஒழிக்க எண்ணினேன்

சின்ன சிறுவர்களை
பணியமர்த்த மறுத்தேன்

சுமையாவும் நானே தூக்கினேன் !
தொழிலாளியாய் நானே ஆனேன் !

வடிவமைப்பு நானே வடித்தேன் !
பொறியாளனாய் நானே ஆனேன் !

பட்டப்படிப்பும் படிக்க வில்லை
பள்ளிக்கும் போனது இல்லை

என் வீடு தனை
சுயமாய் கட்டியதால்

நானும் இன்று ஓர்
தொழிலாளியே !

இப்படிக்கு
காகம்

------------நகைச்சுவையுடன் ஒரு சிந்தனை கவிதை

பொருள் : சுற்றுப்புறத்தை மாசு(காற்றில் மாசு) கலக்காமல் பாது காப்போம்...குழந்தை தொழிலாளர்களை எங்கும் ஒழிப்போம்...இது நகைச்சுவை கலந்த சிந்ததனை கவிதை....குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கு முன் நடவடிக்கையாய் நாம் நம் நல்ல நண்பர்களோடு இணைந்து நம்மால் முடிந்த ஒரு சில குழந்தைகளின் கல்வி செலவை ஏற்போம்....நம் நட்பு ஒரு நல்ல விஷயத்துக்கு பயன்படட்டும்...அது தான் நல்ல நட்புக்கு சிறப்பு......

1 comment:

மதுரை சரவணன் said...

கவிதை அருமை . வாழ்த்துக்கள். குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்புக்கு குரல் கொடுத்ததற்கு நன்றி. நம் பிளாக் படித்து குரல் கொடுக்கவும். வாழ்த்துக்கள்