கண் தானம் பற்றிய குறிப்புகள் : DETAIL ABOUT EYE DONATE :
கண் தானம் பற்றிய குறிப்புகள் :
*** ஒருவர் இறந்த பின்பு அவருடைய கண்களை தானமாக பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொடுப்பது தான் கண் தானம்
*** கண் தானத்துக்கு எழுதி வைத்தால் வீணாக போகாமல் கண் தேவைப்படும் யாருக்கேனும் உபயோகப்படும்.
*** அரசு பொது மருத்துவமனைகளில் கண் தான விண்ணப்பங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
*** தங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் சாட்சி கையெழுத்து இட வேண்டும்.காரணம்,நாளை உங்கள் இறப்பிற்கு பின் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்கள் கண்களை தானமாக தர முன் வருவதற்கே அவர்களுக்கு தகவல் தெரிந்து இருப்பது நல்லது.
----இறப்பிற்கு பின் 6 மணி நேரத்திற்க்குள் கண் தானம் செய்ய பட வேண்டும்.
----கண்களை தானம் கொடுப்பதற்கு வயது வரம்பு எதுவும் தேவை இல்லை.
----கண்ணாடி அணிந்தவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.
----நீரழிவு,ரத்த கொதிப்பு உள்ளவர்கள் கூட கண் தானம் செய்யலாம்
----இயற்கை மரணம்,மூளைச் சாவு,சுயநினைவு இல்லாதவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.
----மூளைக் காய்ச்சல்,டெட்டனஸ்,நிமோனியா,மஞ்சள் காமாலை,வெறி நாய்க் கடி போன்ற வியாதிகளால் இறந்தவர்கள் கண் தானம் கொடுக்க முடியாது.
----கண் தானம் பெற்றவருக்குக்கும்,கண் தானம் அளித்தவரின் ரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
----தானம் கொடுப்பவரின் கண்களை எடுப்பதால் எவ்வித குறையோ,மாற்றமோ இருக்காது.
----கண்களின் விழித்திரை(கார்னியா) அடுத்த நபருக்கு பொருத்தப்படும்.
1 . கார்னியா என்பது நம்முடைய கண்ணுக்கு முன்புறம்,கருவிழிக்கும் முன்னால் நிறமே இல்லாத ஒளி ஊடுருவிச் செல்ல கூடிய ரத்தக் குழாய்கள் எதுவுமே இல்லாத ஒரு மெல்லிய திசு.கண்ணுக்கு ஒரு கண்ணாடி ஜன்னலை போல் அடைந்துள்ளது.தமிழில் விழி வெண்படலம் என்கிறோம்.
2 . கார்னியல் பார்வைக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்க்கு மீண்டும் பார்வை கிடைப்பதற்கு மட்டுமே கண்கள் தானமாக வழங்கி பார்வை வழங்க முடியும்.
3 .பாதிக்கப்பட்ட கண்ணின் கார்னியாவை ஆபரேஷன் மூலமாக அகற்றி விட்டு அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து செய்யப்படும் கார்னியல் டிரான்ஸ்ப்ளான்டேசன் ஆபரேஷன் மீண்டும் பார்வை கிடைப்பதற்கான தீர்வாகும்.இதற்கு தான் கண்கள் தானமாக பெறப்படுகிறது.
4 . கார்னியாவை மட்டும் தனியாக பிரித்து எடுத்தல் என்று ஒரு முறையும்,கண்ணை அகற்றி பிறகு கண்கள் இருந்த இடத்தில் பிளாஸ்டிக் ஸ்குரு மற்றும் கட்டியான பஞ்சு உருண்டைகளை வைத்து இமைகளை தைத்து விடுகிறார்கள்.இது இன்னொரு முறையாகும்.எனவே கண்களை எடுத்த அடையாளம் கூட தெரியாது என்பதே உண்மை.
5 . கண்களை எடுப்பதற்கு தனி அறை தேவை இல்லை.10 முதல் 15 நிமிடங்கள் தான் கண்களை எடுப்பதற்கு ஆகும் நேரம்.
6 . விழி வெண்படலம் பழுதடைவதர்க்கு காரணம்,நோய் கிருமி தாக்குதல் ஏதேனும் காயங்கள்,ஊட்டச் சத்து குறைவின்மை,பிறவி/மரபணு குறைபாடு
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.
வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....
ரா.அனந்தராஜ்.....
HTML LINK TAMIL WEBSITES LINKS
இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....
உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....
எனது தமிழ் கிறுக்கல்கள் :
அரசியல் கவிதைகள்
(3)
ஆன்மீக கவிதைகள்
(7)
கண் தானம் பற்றிய குறிப்புகள்
(5)
கவிதையாய் ஒரு பாடல்கள்
(5)
காதல் கவிதைகள்
(2)
தத்துவ கவிதைகள்
(10)
நட்பு கவிதைகள்
(4)
நம்பிக்கை கவிதைகள்
(5)
நல்ல கருத்து கவிதைகள்
(20)
நாட்டுப்பற்று கவிதைகள்
(2)
பொது கவிதைகள்
(35)
ஞாயிறு, 13 ஜூன், 2010
கண் தானம் பற்றிய குறிப்புகள் : DETAIL ABOUT EYE DONATE
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக