வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

ஞாயிறு, 13 ஜூன், 2010

கண் தானம் பற்றிய குறிப்புகள் : 2

===== கண் தானம் நல்ல முறையில் நடக்க கண் தானம் கொடுப்பவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் : ( கண் தானம் கொடுப்பதோடு நம் கடமை முடிந்து விட வில்லை.அதை கொடுப்பவர்கள் இதை செய்தால் அந்த கண்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் மற்றவருக்கு பயன்படும்)==========

1 . கண்களை மூடி இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சு அல்லது ஐஸ் கட்டிகளை இமைகளின் மீது வைத்து கார்னியா ஈரப்பதத்துடன் இருக்க உதவ வேண்டும்.

2 . தலைக்கு நேராக சுழலும் மின் விசிறியை நிறுத்தி விட வேண்டும்.காரணம்,கார்னியாவில் ஈரப்பதம் குறைந்து விட கூடாது.

3 . தலையை 6 அங்குல உயரத்துக்கு 2 தலையனைகள் வைத்து உயர்த்தி வைக்க வேண்டும்.காராம்,கண்ணில் வீக்கம் வந்து விட கூடாது.

4 . முடிந்தால் மருத்துவர்கள் வரும் வரை இரண்டு கண்களிலும் ஆண்டி பயோடிக் மருந்து குறிப்பிட்ட இடைவெளி விட்டு போடலாம்.காரணம்,அது கண்களில் தொற்று நோய் கிருமிகள் பரவா வண்ணம் தடுக்கும்.

5 . கண்கள் தூசியற்றதாக இருப்பதற்கு கண்களை மூடி ஈரப் பஞ்சை கட்டி வைக்கவும்.

6 . அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: